சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் வீழ்ந்த பொருளாதார நிலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தானுக்கு வந்துள்ளது. இதன் வெளிப்பாடாகவே அந்நாட்டில் அந்நிய கையிருப்பு வெகுவாக குறைந்து வரும் சம்பவமும், கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில் பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல்,டீசலின் விலை லிட்டருக்கு 35 ரூபாய் அதிகரித்துள்ளது. அந்த நாட்டில் வெளிநாட்டு பண கையிறுப்பு கணிசமாக குறைந்துள்ளது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் நாட்டு பண மதிப்பு வெகுவாக சரிந்துவிட்டது. பாகிஸ்தானில் நிலவும் நிலையற்ற அரசியல் சூழலால் சர்வதேச நாணைய நிதியம்,அளிக்க இருந்த நிதி கிடைக்காததால் கடும் சிக்கல் நிலவுகிறது. இந்த நிலையில் சர்வதேச நாணைய நிதிய அதிகாரிகள் இந்த மாத இறுதியில் வர இருந்தனர். ஆனால் அதற்குள் பெட்ரோல்,டீசல் மீதான விலை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்றபடி தான் விலையை நிர்ணயம் செய்ய முடியும் என்று கூறியுள்ள பாகிஸ்தான் அரசின் நிதியமைச்சர் இஷாக் தர் , எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பரிந்துரைத்தன் அடிப்படையில் தான் பாகிஸ்தானில் பெட்ரோல்,டீசல் விலை மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் பணத்தின் மதிப்பு 250 ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல்,டீசல் விலை லிட்டருக்கு 35 ரூபாய் உயர்வு!!
Date: