கிட்டத்தட்ட 10 மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலையில் பெரிய மாற்றமில்லை. சரிவதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்தபோதும், மிக மிகக்குறைவாக இருந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையில் பெரியளவில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 90 டாலரை தாண்டி விற்பனை செய்யப்பட இருக்கிறது. சர்வதேச அளவில் எண்ணெய் உற்பத்தியை திடீரென ஒபெக் நாடுகள் 11 லட்சம் பேரல்களை உற்பத்தி நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்ததால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் 84 டாலர்களாக உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும்பட்சத்தில் எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்களுக்கும் கூடுதல் செலவு ஏற்படுகிறது.இதன் விளைவாக வாடிக்கையாளர்கள் தலையில்தான் அந்த தொகை வந்து விடிகிறது. 90 டாலர்களை தாண்டும்பட்சத்தில் இந்திய சுத்தீகரிப்பு நிறுவனங்களுக்கு அது மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்திவிடும். இந்த சூழலில் மீண்டும் கச்சா எண்ணெய் 100 டாலர்களை தாண்டும்பட்சத்தில் அந்த பாதிப்பு அரசுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தாண்டு இறுதி வரை கச்சா எண்ணெய் விலை 90 அல்லது 100டாலர்கள் என்ற அளவில் இருக்கும் என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர். எனினும் தற்போதுள்ள விலைவாசியில் மீண்டும் பெட்ரோல்,டீசல் விலை உயரும்பட்சத்தில் மிகப்பெரிய தாக்கத்தை அது ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
பெட்ரோல்,டீசல் விலை மீண்டும் உயர வாய்ப்பு…
Date: