சென்னையில் கடந்த 6 நாட்களில் 7-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், கடந்த 4 மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(IOC), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்(HPCL) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்(BPCL) ஆகிய பொதுத்துறை பெட்ரோலிய நிலையங்களுக்கு ரூ.19 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மூடிஸ் முதலீட்டு சேவை நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.
இதேபோல், முதலீடுகள் தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் கிரிசில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கருத்து வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 6நாட்களில் 7-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் இன்று(28.03.2022) பெட்ரோல் லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.105.18 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.95.33 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 6 நாட்களில் 7-வது முறையாக பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்துள்ளது. கடந்த 6 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.78-ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.3.90-ஆகவும் அதிகரித்துள்ளது.