அமெரிக்காவில் கடந்தமாதம் நிலவிய பணவீக்கம் குறித்த தகவல்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி எதிர்பார்த்த அளவை விட செப்டம்பரில் பணவீக்கம் மிகவும் உயர்ந்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை கடுமையாக உயர்த்தினாலும் விலைவாசி மட்டும் கட்டுப்படவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதம் 0.2%அதிகரித்த பணவீக்கம் செப்டம்பரில் இரட்டிப்பாகி 0.4%ஆக உயர்ந்துள்ளது.
உணவு,தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகளுக்கான கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது.
அமெரிக்கா எடுத்துவரும் சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக விலைவாசி உயர்வு 8.3%-ல் இருந்து 8.2%ஆக சரிந்துள்ளது.
அமெரிக்காவில் பெடரல் ரிசர்வின் அடுத்த அறிவிப்பு நவம்பர் மாதம் வர உள்ளது. கடந்த முறை 0.75 புள்ளிகள் அளவுக்கு வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது . அமெரிக்காவில் மாற்றி அமைக்கப்பட்ட வட்டி விகிதத்தால் கல்வி, மோட்டார் வாகன காப்பீடு, வீட்டு உபயோக பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் ஆளும் பைடன் அரசாங்கத்துக்கு எதிராக குடியரசுக்கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.ரஷ்யா உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள உணவு விலை உயர்வை பைடன் அரசு வேடிக்கை பார்ப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.