இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் நிலவிய கடும் வறட்சி காரணமாக கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை மத்திய அரசு தடை செய்தது. இந்திய மக்களின் தேவைக்காக இந்த நடவடிக்கையை மத்திய அரசு செய்திருந்தது. இந்த நிலையில் இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் கோதுமையை அரைத்து மாவாக மாற்றி அதை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் காரணமாக உலகளவில் உணவுப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் இந்தியாவும் கோதுமையை ஏற்றுமதி செய்யாமல் இருப்பதால் கோதுமைக்கு பெரிய அளவில் தேவை உள்ளது.
இந்தியாவிலேயே கோதுமை விலை அதிகரித்துள்ளதன் காரணமாக கோதுமை மாவை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். கோதுமையைப் போலவே அரிசியையும் மத்திய அரசு ஏற்றுமதி செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் இந்த தற்காப்பு முயற்சி காரணமாக ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு உணவு தேவைய அதிகரிப்பதுடன் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.