வெறும் தண்ணீரும் ரகசிய பார்முலாவையும் வைத்து விற்கப்படும் பெப்சியின் கால்படாத நாடுகளே இல்லை என்று கூட சொல்லலாம். இத்தகைய சக்தி வாய்ந்த வணிக ஆக்டோபஸ் கரங்களை வைத்துள்ள பெப்சிகோ நிறுவனமே தற்போது சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது வடக்கு அமெரிக்காவின் ஸ்னாக்ஸ் பிரிவு அலுவலகத்திலும்,எந்த வித அறிவிப்பும் இல்லாமல் நூற்றுக்கணக்கான பணியாளர்களை நியுயார்க் அலுவலகத்தில் இருந்து நீக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெரிய பெரிய நிறுவனங்களான மெட்டா, ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களே பொருளாதார மந்தநிலையில் தாக்குப்பிடிக்க முடியாத சூழலில் தங்கள் நிறுவனமும் பாதிக்கப்பட்டுள்ளதாக பெப்சிகோ நிறுவனம் கூறியுள்ளது. திடீரென பணியாளர்களை பணிநீக்கம் செய்த பெப்சிகோ நிறுவனத்தின் செயலை அடுத்து இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு பூஜ்ஜியம் புள்ளி 1 % குறைந்துள்ளது. பெப்சியின் தாய் நிறுவனத்தின் பொருட்களுக்கு உலகம் முழுவதும் அமோக வரவேற்பு உள்ளது
குறிப்பாக பிரிட்டோ லே சிப்ஸ்,மவுண்டைன் டியூ, குவேக்கர் ஓட்ஸ் நிறுவனங்களின் பொருட்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பல ஆண்டுகளாக வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெப்சியிலும் தொடங்கியது ஆட்குறைப்பு!!!!
Date: