உலகளவில் கடும் பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருவதால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. முன்னணி நிறுவனங்களான பேஸ்புக், டிவிட்டர் ,கூகுள் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்களும் தங்கள் பாக்கெட்டில் உள்ள பணத்தை எப்படி பத்திரமாக பார்த்துக்கொள்வது என்பதிலேயே குறியாக உள்ளனர். இதனால் ஊழியர்களின் எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் சகட்டு மேனிக்கு ஊழியர்களின் எண்ணிக்கையை வெட்டிவிட்டு வருகின்றனர். இந்த கொடூர செயலால் திறமையான இந்திய பணியாளர்கள் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகம் என்கிறது புள்ளிவிவரம் .இந்த சூழலில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் டெல் நிறுவனத்தின் விற்பனை கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக சரிந்து வருகின்றன. பொருளை வாங்கவே ஆள் இல்லை இதில் பொருளுக்கு பராமரிப்புக்கு எதற்கு ஆட்கள் என்று கருதிய டெல் நிறுவனம் 6 ஆயிரத்து 500 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரிய பெரிய கணினி நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கையாக ஆட்குறைப்பு செய்வதை தற்போதைய டிரண்டாக்கியுள்ளனர். பணியாளர்களை கிள்ளு கீரையைப் போல பயன்படுத்திக்கொள்ளும் நிறுவனங்கள் தேவைப்பட்டால் அதிக அளவுக்கு ஆட்களை எடுத்துக்கொள்வதுடன், தேவையில்லை என்றால் தூக்கி குப்பையை போல வீசிவிடுகின்றன. இந்தாண்டின் முதல் இரு மாதங்களில் மட்டும் உலகளவில் 1 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதால் படித்த திறமையான இளைஞர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இந்த நிறுவனத்திலும் தொடங்கியது ஆட்குறைப்பு நடவடிக்கை!!!
Date: