இந்திய ரூபாய் ஒப்பீட்டளவில் வலுவான அமெரிக்க டாலர், உயரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் கோவிட் பரவலின் எதிர்வினைகள் போன்ற காரணிகள் உள்நாட்டு நாணயத்திற்கான மதிப்பீட்டைக் குறைப்பதால், இந்திய ரூபாயின் மதிப்பு 76 ரூபாயில் இருந்து 76.50 வரை செல்லும் வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நிச்சயமற்ற பொருளாதார சூழலுக்கு நடுவில் கடந்த சில மாதங்களில் கணிசமாக பாதிக்கப்பட்ட ஆசிய நாணயங்களில் ஒன்றான இந்திய ரூபாயின் மதிப்பு, தேய்மானம் (depreciation) காரணமாக கீழ் நோக்கி வீழ்வதற்கு முன்பாக தற்போதைய மதிப்பில் ஒரு ஒருங்கிணைவைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குச் சந்தை அவ்வப்போது ஏற்ற இறக்கத்தோடு இருந்தாலும் அதன் மதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சமீபத்திய மாதங்களில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும்பாலும் பலவீனமாக உள்ளது. உள்நாட்டு நாணயமானது அமெரிக்க டாலராய்க்கு எதிராக 2 % சரிந்ததால், ஜூலையில் அதன் சரிவு விகிதம் சுமார் 0.18 சதவீதமாக இருந்தது. தற்போதைய மதிப்பான ₹73.50 உடன், அமெரிக்க டாலர் மற்றும் இந்திய ரூபாய் ஜோடிக்கான குறுகிய கால மதிப்பீடுகள் நிலையற்றுக் காணப்படுகிறது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
நீண்ட கால மதிப்பீட்டில், உள்நாட்டு நாணயத்தின் மதிப்பு 75.50 ரூபாய் அல்லது 76 ரூபாய் என்கிற அளவை நோக்கி சரிவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் ₹77 என்ற அதிகபட்ச அளவை எட்டக்கூடும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். ₹யின் மதிப்பானது அமெரிக்க டாலருக்கு எதிராக உயர்வதற்கான காரணிகளாக, அமெரிக்க பெடரல் வாங்கி மாற்றி அமைக்கப்போகும் வட்டி விகிதங்கள் (interest rates), பொருளாதார மீட்பு குறித்த அதன் கண்ணோட்டம் மட்டுமில்லாமல், சீனா மீதான ஜோ பிடென் நிர்வாகத்தின் நிலைப்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இருக்கும்.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி கடைசியாக நடந்த அதன் கொள்கை கூட்டத்தில் (policy meeting) கடுமையானதாகத் தோற்றமளித்தது, ஆனால் பணவீக்கம், வளர்ச்சி மற்றும் பத்திரங்களைக் குறைக்கும் திட்டம் ஆகியவற்றில் மத்திய வங்கி உறுப்பினர்களின் நிலைப்பாடு ஆகியவை அமெரிக்க டாலருக்கான ஏற்ற இறக்கத்தை மாற்றி அமைக்கக்கூடும்,” என்று மோதிலால் ஒஸ்வால் பைனான்சியல் சர்வீசஸின் அந்நிய செலாவணி மற்றும் நிதி ஆய்வாளர் கௌராங் சோமையா கூறினார்.
எல்.கே.பி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் மூத்த பகுப்பாய்வு அலுவலர் (senior research analyst) ஜடீன் திரிவேதியின் கருத்துப்படி, “நீண்ட காலத்திற்கு இந்த பொருளாதார போக்கு இந்திய ரூபாயின் பலவீனமாக இருக்கும். டாலர் குறியீட்டின் பின்புலமானது $90 க்கு மேல் உறுதியாக்கப்படும். கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் கோவிட் டெல்டா நோய்த்தொற்றின் தாக்கம், உலகளவில் மீண்டும் முடக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இது உள்நாட்டு நாணயத்தின் வளர்ச்சிக்கு உதவாது. மேலும், சந்தை முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் பத்திரக் குறைப்பு நடவடிக்கை பற்றிய எந்த அறிவிப்பையும் கவனமாகக் கண்காணிப்பார்கள் மற்றும் ஒரு மிக வேகமான அமெரிக்க பொருளாதார மீட்பு வலிமையான டாலரை உருவாக்கும், சந்தையின் நாணயங்களை இது உறுதியாகப் பாதிக்கும்.
கச்சா எண்ணெய் விலை உயர்வானது இந்திய ரூபாயை கடுமையாகப் பாதிக்கும் சூழலில், ஜூன் மாதம் நடைபெற்ற அமெரிக்க பொருளாதாரக் கொள்கைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட கறாரான சில முடிவுகள் அமெரிக்க டாலரின் மதிப்பை அதிகரிக்கச் செய்யும்.
வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் பெரிய அளவில் செயல்படாமல் இருப்பதும் இந்திய ரூபாயின் மதிப்பைக் குலைக்கும். இந்தியாவைப் போன்ற வளரும் பொருளாதார நாடுகள் வேகமாகப் பரவி வரும் கோவிட் டெல்டா நோய்த்தொற்றால் கடுமையான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் நிதி உள்ளீடுகள், உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கான அரசின் வளர்ச்சிக் கண்ணோட்டம், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் போக்கு, பணவீக்கம் குறித்த ரிசர்வ் வங்கியின் பார்வை, நிதிக் கொள்கை குறித்த மத்திய வங்கியின் நிலைப்பாடு மற்றும் கோவிட் பெருந்தொற்றின் தாக்கங்கள் ஆகியவை இந்திய ரூபாயின் மதிப்பை பிந்தைய காலத்துக்கு எடுத்துச் செல்லும்” என்று சச்தேவா கூறினார்.
இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடையும் என்று ரிலையன்ஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் (senior analyst) ஸ்ரீராம் ஐயர் குறிப்பிடுகிறார். அது தற்போதைக்கு ₹73.30 முதல் ₹75.50 வரையிலும். நிதியாண்டின் முடிவில் ₹76 முதல் ₹76.50 வரைக்கும் செல்லக்கூடும் என்று அவர் மேலும் கூறுகிறார். பரவும் கோவிட் பெருந்தொற்றின் மூன்றாவது அலை தான் இப்போது உள்நாட்டு முதலீட்டாளர்களின் மிகப்பெரிய கவலை.
Credits – PTI