இந்தியா உள்பட சில ஆசிய நாடுகளுக்கு 30 சதவீத எண்ணெய் தள்ளுபடியையும் நீண்ட கால எண்ணெய் ஒப்பந்தத்தை வழங்குவதையும் ரஷ்யா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
ரஷ்ய எண்ணெய் மீதான ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகளுக்கு விதிவிலக்கை உருவாக்குவது குறித்து G7 நாடுகளின் விவாதங்களைத் தடுக்க ரஷ்யா முயற்சிக்கிறது என்பதற்கான அறிகுறியாக இந்தப் பேச்சுக்கள் இருக்கலாம் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
இந்த வாரம் அமெரிக்க அதிகாரிகள் மும்பை மற்றும் புது தில்லிக்கு பயணம் செய்யும் போது ரஷ்யாவின் எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும் அமெரிக்கா தலைமையிலான முயற்சிகளை ஆதரிப்பதற்கு அழுத்தம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.