பிப்ரவரி மாதமும் ஜிஎஸ்டி வசூல் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் 1.58லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகமானதில் இருந்து கடந்த ஜனவரி மாதம்தான் இரண்டாவது அதிகபட்ச ஜிஎஸ்டி வசூலானது. இந்நிலையி்ல் தொடர்ந்து 12 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் 1லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலாகியுள்ளது. கடந்த மாதம் மட்டும் 1 லட்சத்து 49 ஆயிரத்து 577 கோடி ரூபாய் ஜிஎஸ்டியாக கிடைத்திருக்கிறது. இதில் மத்திய ஜிஎஸ்டியாக 27ஆயிரத்து 662 கோடி ரூபாயாகவும், மாநில ஜிஎஸ்டியாக 34 ஆயிரத்து 915 கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக 75ஆயிரத்து 69 கோடி வசூலாகியுள்ளது. மேலும் செஸ் வரியாக 11,931 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. செஸ் வரியில் கடந்த மாத வரி வசூலே அதிகபட்சமாக உள்ளது கிடைத்த ஜிஎஸ்டி வரியில் மத்திய அரசுக்கு 62,432 கோடி ரூபாயும், மாநில அரசுக்கு 63 ஆயிரத்து 969 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.