வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க மற்றும் ஆசிய சந்தை சாதகமாக அமைந்த நிலையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு உயர்வுடன் துவங்கியது மட்டும் அல்லாமல், சென்செக்ஸ் மீண்டும் 60,000 புள்ளிகளை அடைந்துள்ளது. இந்த வாரம் கடந்த புதன்கிழமையை தவிர்த்து மற்ற 4 தினங்களிலும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது.
இந்திய பங்குச் சந்தைகளில், இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,293.48 புள்ளிகள் உயர்ந்து 60,059.06 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 363.15 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,895.20 புள்ளிகளில் முடிவுற்றது. இது சந்தை முதலீட்டாளா்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
INDEX | PRICES | CHANGE | CHANGE % |
Sensex | 60,059.06 | + 381.23 | ▲ +0.64 % |
Nifty 50 | 17,895.20 | + 104.85 | ▲ +0.59% |
Nifty Bank | 37,775.25 | + 22.05 | ▲ +0.06% |