ருச்சி சோயா நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 19 சதவீதம் வரை சரிவை சந்தித்தன.
Ruchi Soya Industries நிறுவனம் ருச்சி கோல்ட் சமையல் எண்ணெய் உட்பட பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் பதஞ்சலி ஆயுர்வேத குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிறுவனம் FPO மூலம் பங்குகளை வெளியிட்டது. ஒரு பங்கின் விலையை 616 ரூபாய் முதல் 650 ரூபாய் வரை நிர்ணயித்து அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இதன் FPO மூலம் பங்கு விகிதத்தை அறிவித்ததும், வர்த்தக நேரமுடிவில், சரிவை கண்டன. வர்த்தகத்தின் தொடக்கத்தில், ருச்சி சோயா நிறுவன பங்குகள் 19 சதவீதம் குறைந்து ரூ.706-ஆக இருந்தது. சென்சக்சில், 456.41 புள்ளிகள் குறைந்து 59,720.09 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டது.
இந்நிறுவனம் ஈக்விடிட்டி பங்குகளை ஒதுக்கீடு செய்து அறிவித்தவுடன், அதன் மூலதன மதிப்பானது ரூ.59.16 கோடியிலிருந்து ரூ.72.4 கோடி அளவுக்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.