இந்தியாவில் தான் திறந்த கடையை 6 மாதங்களுக்குள்ளேயே மூடுவதாக சிங்கப்பூரை சேர்ந்த மின்வணிக நிறுவனமான Shoppe அறிவித்துள்ளது.
E-Commerce நிறுவனங்களான Meesho, Flipkart மற்றும் Amazon India ஆகியவை முன்னணி மின்வணிக நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன.
இந்த முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிட்டு, மின்வணிகத்தில் அடித்தட்டு மக்களையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காக சிங்கப்பூரை சேர்ந்த Shoppe திட்டமிட்டு, ஆறு மாதங்களுக்கு முன்பாக களமிறங்கியது. இந்நிலையில், தற்போது இந்தியாவில் தான் திறந்த ஈ-காமர்ஸ் வணிகத்தை மூடப்போவதாக அறிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இந்தியாவில் தனது செயல்பாடுகளை மார்ச் 29-ம் தேதி முதல்(இன்று) நிறுத்துவதாகவும் ஷாப்பீ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பல்வேறு காரணங்களால் உலகளாவிய சந்தைகளில் தற்போது நிச்சயமற்ற தன்மை உள்ளதாகவும், இதனாலேயே ஷாப்பீ நிறுவனத்தை மூட முடிவு செய்துள்ளதாகவும் அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
தென்கிழக்கு ஆசிய நாட்டை சேர்ந்த South East Asia Limited(SEA)-வின் மின்வணிக நிறுவனமான ஷாப்பீ 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் பிரான்ஸ் நாட்டிலும், அதற்கு முன்பாக ஐரோப்பிய சந்தையிலும் தனது நிறுவனத்தை மூடிய நிலையில், தற்போது இந்தியாவிலும் மூடியுள்ளது.