வோடஃபோன் ஐடியா கூட்டு நிறுவனம் அதீத கடன் சுமையால் தவித்து வருகிறது. 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் கோடி
ரூபாய் கடன் உடனடியாக தேவைப்படுவதால், இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில்
கடன் கேட்டுள்ளது. அந்த வங்கியில் கடனும் குறைவு என்பதால் வோடஃபோன் நிறுவனம் விடாமல் தொடர்ந்து கடன் கேட்டு
வருகிறது. வங்கியில் இருந்து கடன் தொகை கிடைத்த உடன் அதனை வைத்து 5ஜி சேவையை துவங்க இருக்கும் அந்நிறுவனம் பழைய கடன்களையும் அடைக்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக வோடஃபோன் அதிகாரிகள் நடையாக நடந்து வருகின்றனர். வோடஃபோன் ஐடியாவின் புரோமோட்டரான ஆதித்யா பிர்லா குழுமத்தினர். இன்னும் அதிக பங்குகளை பங்குச்சந்தைகளில் வெளியிட வேண்டுமா என்றும் விவாதித்து வருகின்றனர். நஷ்டம் ஏற்பட்டு வரும் நிறுவனத்துக்கு நாங்கள் எப்படி கடன் தர முடியும் என்று வங்கிகள் தரப்பில் முரண்டுபிடித்து வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது. எனினும் எவ்வளவு கடன் தரலாம் என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் வோடஃபோன் நிறுவனத்தின் நஷ்டம் 7ஆயிரத்து 600 கோடி ரூபாயாக உள்ளது. சேவை குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் 60 லட்சம் வாடிக்கையாளர்களை அந்த நிறுவனம் இந்த காலாண்டில் இழந்துள்ளது.
தற்போது இந்தியாவில் வோடஃபோன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 23 கோடியே 44 லட்சமாக சரிந்துள்ளது. வோடஃபோனில் இருந்து விலகிய வாடிக்கையாளர்கள் ஜியோவில் புதிதாக அதிகம் சேர்ந்துள்ளனர். குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் மட்டும் ஜியோ நிறுவனத்தில் புதிய வாடிக்கையாளர்கள் 77 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.
4ஜி போட்டியை சமாளிக்க வோடஃபோனுக்கு போதிய மூலதனம் தேவைப்படுவதால் தற்போது பாரத ஸ்டேட் வங்கி கொடுத்து உதவினால் மட்டுமே மிகுந்த உதவியாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
ஐயா !!!! ஒரு 16000 கோடி கடன் வேணும்!!!!
Date: