கடும் பொருளாதார சிக்கலில் தவித்து மெல்ல மெல்ல மீண்டு வரும் இலங்கை, இன்னும் முழுமையாக விடுபடவில்லை.இதுபற்றி பேசிய அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சர்வதேச நாணய நிதியம் பணம் அளித்து உதவினால் மட்டுமே நாடு பொருளாதார சிக்கலில் இருந்து விடுபடும் என்று கூறியுள்ளார். நாடே திவாலாகி கிடக்கும் நிலையில் நாணய நிதியத்தை தவிர்த்து வேறு எந்த அமைப்பும் காப்பாற்ற முடியாது என்றும் அவர் பேசியுள்ளார். பொருளாதார சிக்கலில் சிக்கிய கிரீஸ் நாடு அதில் இருந்து மீள 13 ஆண்டுகள் தேவைப்பட்டதாக கூறியுள்ள ரணில் விக்ரமசிங்கே. கடுமையான வரிவிதிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். சர்வதேச நாணய நிதியம் தங்களுக்கு 15 பணிகளை கொடுத்துள்ளதாகவும்,டிசம்பருக்குள் அதனை செய்ய முயன்று தோற்றதாகவும், ஜனவரியிலும் அதனை செய்ய முடியவில்லை என்றும் ரணில் கூறியுள்ளார். சீனாவிடம் இருந்து உதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமார்ந்ததுதான் மிச்சம் என்றும்,சீனா உலகின் முக்கிய சக்தியாக உள்ளது, அவர்களின் அனுகுமுறை வேறாக உள்ளது என்றும் ரணில் குறிப்பிட்டார். நாணய நிதியம் பணம் தந்து உதவி செய்யாவிட்டால் மீண்டும் கடந்தாண்டில் ஏற்பட்ட சிக்கல் மீண்டும் உருவாகும் என்றும் நினைவூட்டிய ரணில், இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து மிகப்பெரிய சிக்கலை கடந்தாண்டு சந்தித்ததையும் நினைவு கூர்ந்தார். சர்வதேச நாணய நிதியம் கடந்த செப்டம்பரில் 2.9பில்லியன் டாலர் கடனை இலங்கைக்கு தர ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தொகை வரும் மாதமான மார்ச்சில் இலங்கைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“ஐயா உங்களால மட்டும்தான்யா நாட்டையே காப்பாத்த முடியும்” !!!
Date: