இந்தியாவின் முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனமான ஸ்நாப்டீல் தனது வளர்ச்சி திட்டத்திற்காகவும், வர்த்தகத்தை விரிவு படுத்துவதற்காகவும் முதலீட்டை திரட்ட ஐபிஓவினை வெளியிட திட்டமிட்டுள்ளது.
ஐபிஓ வெளியிடுவதற்காக செபியிடம் விண்ணப்பிக்க உள்ளதாகவும் , மார்ச் மாதம் ஐபிஓ வெளியிட இருப்பதாகவும் இதன் மூலம் 1.5 பில்லியன் டாலர் மதிப்பில் 200 மில்லியன் டாலர்களை திரட்ட ஸ்நாப்டீல் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்நாப்டீல் நிறுவனத்தில் அலிபாபா நிறுவனம், பிளாக் ராக், டெமா செக் ஹோல்டிங்ஸ், ஈபே நிறுவனங்கள் பங்குகளை வைத்துள்ளன. அலிபாபா நிறுவனத்தைத் தவிர மற்ற மூன்று நிறுவனங்களும் தங்களது பங்குகளை விற்பனை செய்யவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.