சிலிக்கான் வேலி வங்கி திவாலாகிவிட்ட இந்த சூழலில் இதனால் உலகளவில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி 2 நாட்களில் 465 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளிலும் இந்த பாதிப்பு கண்கூடாக தெரிந்தது. இந்தியாவுக்கும் சிலிக்கான் வேலி வங்கிக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் கூட இதன் பாதிப்புகள் அதிகமாகவே பதிவாகியுள்ளன. அமெரிக்காவில் தொடங்கி ஜப்பான் வரை இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசிய பசிபிக் நிதி குறியீட்டில் 2.7% சரிவு பதிவாகியுள்ளது. ஜப்பானில் 8.3%, தென்கொரியாவில் 4.7% ஆல்திரேலியாவில் 2.8% சரிவு காணப்பட்டுள்ளது. பெடரல் ரிசர்வ் அவசரமாக இது தொடர்பாக ஆலோசித்து வந்தாலும், அந்த வங்கி தொடர்பான அச்சம் பல நாடுகளிலும் விலகாமலேயே நீடிக்கிறது. அமெரிக்கா தவிர்த்து ஆஸ்திரேலியா,ஜப்பான் மற்றும் தென்கொரியாவுடன் இந்திய சந்தைகளும் சேர்ந்தால் இன்னும் பாதிப்பு பலமடங்கு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இந்தியாவிலும் வங்கித்துறை பங்குகள் லேசான ஆட்டம் கண்டன. இதன் விளைவாக பலரும் தங்கள் வசம் இருக்கும் வங்கித்துறை பங்குகளை கையில் வைத்துக்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். இருப்பது மட்டுமாவது மிஞ்சட்டும் என்று ஜப்பானில் பல முதலீட்டாளர்கள் வங்கித்துறை பங்குகளை விற்று வருகின்றனர். அமெரிக்க வங்கிகள் அடுத்தடுத்து திவாலாகி வரும் சூழலில் இந்திய பங்குச்சந்தைகளில் அதன் பாதிப்பு தெளிவாக தெரிந்தது. எனினும் இந்தியாவின் வலுவான வங்கிக்கட்டமைப்பால் பாதிப்பு அதிகம் இன்றி தப்ப முடிவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தனை லட்சம் கோடி பாதிப்பு ஏற்பட்டதா?
Date: