மத்திய அரசு டிடிஎஸ் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசுக்கு பல்வேறு நிறுவனங்கள், சொத்து வைத்திருக்கும் பிறநிறுவனங்கள் வாயிலாக வரியாக மட்டுமே 60 கோடியே 46 லட்சம் ரூபாய் கிடைத்திருப்பதாக கூறியுள்ளது. கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்துள்ளோருக்கும் அதில் இருந்து கிடைக்கும் வருவாய்க்கு அரசு 30% வரி விதித்துள்ளது, தகவல் தொழில்நுட்ப சட்டத்திலும் மாறுதல் செய்யப்பட்டு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் மெய்நிகர் டிஜிட்டல் பணத்துக்கு 10ஆயிரம் ரூபாய் வரியாக வசூலிக்கிறது. இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார்.அதன்படி டிடிஎஸ் மூலம் நேரடியாக 318 கோடி ரூபாய் கிடைத்து வரும் சூழலில் அதில் மெய்நிகர் வடிவில் கிடைத்துள்ள பணம் மட்டும் 60 கோடியே 46 லட்சம் ரூபாயாக உள்ளது என்றார். ஏற்கனவே உள்ள வருமான வரி சட்டத்தில் நடப்பாண்டு செய்துள்ள திருத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் டிடிஎஸ் வகையில் அதுவும் கிரிப்டோ மாதிரியான மெய்நிகர் நாணயங்களுக்கு வரியாக இத்தனை கோடி ரூபாய் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.