இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் தலைவர் அசீம் பிரேம்ஜி இந்திய மென்பொருள் துறையின் சக்கரவர்த்தி என்று போற்றப்படுகிறார். இவர் தொழிலதிபர் என்ற அடையாளத்தைத் தாண்டி சமூக மேம்பாடுகளுக்காக தொடர்ந்து பங்களித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு கொடை வள்ளல் என்றால் அது மிகையில்லை. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ₹ 9,213 கோடி நன்கொடையாக வழங்கி இருக்கிறார், அதாவது நாள் ஒன்றுக்கு ₹ 27 கோடி ரூபாய் வழங்கி இருக்கிறார்
இவருக்கு அடுத்ததாக சமூக மேம்பாடுகளுக்காக நன்கொடை வழங்குவதில் ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ் நிறுவனர் ஷிவ் நாடார் முன்னணியில் இருக்கிறார், இவரது பங்களிப்பு ஆண்டொன்றுக்கு ₹ 1263 கோடியாகும். இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரரான ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி ₹ 577 கோடி பங்களிப்பு செய்து மூன்றாவது இடத்தில் உள்ளார், இவருக்கு அடுத்ததாக ஆதித்ய பிர்லா குழுமத்தின் குமார்மங்கலம் பிர்லா ₹ 377 கோடி ரூபாயும், இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான கௌதம் அதானி ₹ 130 கோடி நன்கொடையாக வழங்கி 8 ஆவது இடத்திலும் இருக்கிறார்.