ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் ரிசர்வ் வங்கியின் ரெபோ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது. அதாவது இதற்கு முன்பு வீட்டுக்கடன் 8.5 விழுக்காடாக இருந்தால் தற்போது அந்த வட்டி விகிதம் 8.55%ஆக உயர்ந்துள்ளது.
வீட்டுக்கடன் மட்டுமின்றி அனைத்துத்தரப்பு கடன்களும் 50 அடிப்படை புள்ளிகள் அதகரித்துள்ளது.
EBLR 8.55% ஆகவும்,RLRR 8.15%ஆகவும் இருக்க உள்ளது.
இந்த புதிய நடைமுறை 1ம் தேதி முதல் அமலக்கு வந்துள்ளது.வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால் மாதாந்திர ஈஎம்ஐயும் அதிகரிக்கும் என்பதால் கடன் பெற்றோர் கலக்கத்தில் உள்ளனர்.