State Bank Of India, 406 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வசூலிப்பதற்காக தனது 6 செயல்படாத சொத்துகளை(NPA) சொத்து மறுகட்டமைப்பு நிறுவனங்களுக்கு(ARC) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
நிலுவையில் உள்ள 6 செயல்படாத சொத்துகள்
பாட்னா பக்தியார்பூர் டோல்வே-வின் ரூ. 230.66 கோடி. ஸ்டீல்கோ குஜராத் லிமிடெட் ரூ.68.31 கோடி, GOL ஆஃப்ஷோர் லிமிடெட் ரூ. 50.75 கோடி நிலுவையில் உள்ளன. இதேபோல், ஆந்திரா ஃபெரோ அலாய்ஸ் லிமிடெட் ரூ.26.73 கோடி. குரு ஆஷிஷ் டாக்ஸ்பேப் ரூ.17.07 கோடி மற்றும் ஜெனிக்ஸ் ஆட்டோமேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.12.23 கோடி ஆகியவையும் நிலுவையில் இருக்கின்றன. இந்த சொத்துகளுக்கான விற்பனை அறிவிப்புகளை State Bank Of India வெளியிட்டுள்ளது.
ஏலம் நடைபெறும் நாள்:
பாட்னா பக்தியார்பூருக்கான மின்-ஏலம் பிப்ரவரி 23-ஆம் தேதியும், GOL ஆஃப்ஷோர் பிப்ரவரி 21-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. ஜெனிக்ஸ் ஆட்டோமேஷன்ஸ் மற்றும் குரு ஆஷிஷ் டெக்ஸ்பேப் பிப்ரவரி 15 ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளன, மார்ச் 4 ந் தேதிக்கு பிறகு ஸ்டீல்கோ குஜராத் மற்றும் ஆந்திரா ஃபெரோ அலாய்ஸிற்கான ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் சேலஞ்ச் முறையில் ஏலம்:
இதன் ஏலம் சுவிஸ் சேலஞ்ச் முறையின் கீழ் நடைபெறும் என்றும், ஆர்வமுள்ள ஏலதாரர்கள் ஒரு திட்டத்துக்கான முன்மொழிவை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனையாளர் திட்டத்தின் விவரங்களைப் பொதுவில் வைக்கிறார். ஏலங்களைப் பெற்ற பிறகு, அசல் ஒப்பந்ததாரர் சிறந்த ஏலத்துடன் பொருந்துவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்.