வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் நல்ல ஏற்றம் கண்டன.இது மட்டுமின்றி 1 விழுக்காடு பங்குகள் விலை ஏற்றமும் பெற்றுள்ளன. ரியல் எஸ்டேட்,வங்கி, உலோகம்,மற்றும் ஆற்றல் துறை பங்குகள் கடந்தவார சரிவில் இருந்து மெல்ல மீண்டு வருகின்றன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 207 புள்ளிகளும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 721 புள்ளிகளும் உயர்ந்துள்ளன. பொதுத்துறை வங்கிகள் வலுவான நிலையில் இருப்பதால் இந்த லாபம் கிடைத்திருப்பதாகவும்,நடுத்தர மற்றும் சிறிய ரக பங்குகள் சிறப்பாக செயல்பட்டதாலும் முதலீட்டாளர்கள் கவனம் பங்குச்சந்தைகள் பக்கம் திரும்பியுள்ளன. உலகம் முழுவதும் மக்கள் தற்போதே விடுமுறை எடுத்துக்கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாலும், கொரோனா பீதி ஒரு பக்கம் இருந்தாலும் பிற துறைகள் வளர்ச்சியும் நன்றாக உள்ளதாலும் இந்திய சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. மிகச்சிறப்பாக பங்களிப்பை தந்துள்ள பொதுத்துறை வங்கிகள் 7%வளர்ச்சியை கண்டுள்ளதால் அந்த துறைகளில் முதலீடுகள் செய்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும் ரோலர் கோஸ்டரைப் போல அதீத வளர்ச்சியும்,அதீத வீழ்ச்சியும் சந்திக்கத் தயாராக உள்ளவர்கள் முதலீடுகளில் ஈடுபடலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பீனிக்ஸாக எழுந்த பங்குச்சந்தைகள்!!!
Date: