YES வங்கியானது டிசம்பர் 31, 2021 நிலவரப்படி, நிகர முன்பணம் (Net Advance) கிட்டத்தட்ட 4 சதவீதம் அதிகரித்து, தற்காலிக அடிப்படையில் ரூ.1,76,422 கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. டிசம்பர் 31, 2020 நிலவரப்படி நிகர முன்பணம் ரூ. 1,69,721 கோடியாக இருந்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் ரூ.1,069.4 கோடி. ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டின் அடிப்படையில் இது 111.3 % வளர்ச்சி. சென்ற காலாண்டுடன் ஒப்பிடும்போது 3.2 % குறைவு. நிகர ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டில் வட்டி வருமானம் ரூ.7,240.30 அதாவது 12.9 % குறையக்கூடும், ப்ரீ ப்ரொவிஷன் ஆப்பரேட்டிங் லாபமானது 20.1 % குறைந்து Rs.5,106.50 கோடியாக இருக்கும்.
ஐடி துறையில் முன்னணி நிறுவனமான அக்சென்சர் இன்னும் சில நாட்களில் டிசம்பருடன் முடிந்த காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது, எனவே சந்தையில் அனைவரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். விப்ரோவின் நிர்வாகக் குழு கூட்டமானது ஜனவரி...