ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் சவூதியின் அரம்கோ ஆகிய நிறுவனங்களுக்கிடையில் நடந்த பேச்சுவார்த்தையை நிறுத்திய சில மாதங்களில், அதானி குழுமம், அராம்கோவின் பங்குகளை அரசின் பொது முதலீட்டு நிதியத்தில் இருந்து வாங்கும் யோசனையைப் பற்றி விவாதித்துள்ளது.
அதானி குழுமங்கள் மற்றும் அதானி அறக்கட்டளை நிறுவன தலைவராக கௌதம் அதானி உள்ளார். துறைமுகம், வேளாண்மை, எரிபொருள், மின்னுற்பத்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் அதானி குழுமம் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில், Reliance Industries நிறுவனத்தின் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அவருடைய நிகர சொத்து மதிப்பு 92.4 பில்லியன் டாலராக உள்ளது.
கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய அதானி, 1980-களின் முற்பகுதியில் மும்பையின் வைரத் தொழிலில் தனது அதிர்ஷ்டத்தை முதன்முதலில் முயற்சித்தார். 1988ல் அதானி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நிறுவினார். 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போது தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் பிணைக் கைதிகளில் ஒருவராக இருந்தார்.