டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் என்.சந்திரசேகரனை ஏர் இந்தியாவின் புதிய தலைவராக அறிவித்துள்ள டாடா குழுமம் அதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளது. Tata Sons நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் டாடா ஹோல்டிங் உட்பட 100-க்கும் மேற்பட்ட டாடா குழும நிறுவனங்களை வழி நடத்தி வருகிறார்.
சமீபத்தில் தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டி.யாக அய்சியை நியமிப்பதாக டாடா சன்ஸ் பிப்ரவரி 14-ம் தேதி அறிவித்தது.
தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை, 69 ஆண்டுகளுக்குப் பிறகு, TATA குழுமம் மீண்டும் வாங்கியுள்ளது. கடந்த ஜனவரி 27-ம் தேதி, ஏர் இந்தியா டாடா நிறுவனத்திடம், முழுமையாக ஒப்படைக்கப்பட்டது.
Air India நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்வதற்காக, மத்திய அரசு, அதனை தனியாருக்கு ஏலம் விட்டது. அதன்படி, Tata நிறுவனம் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 2022ஆம் ஆண்டு உலகளாவிய விமானத் துறைக்கு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இருப்பினும், குறுகிய காலத்திற்கு பயணிகள் குறைந்த கட்டணத்தில் மீண்டும் பயணம் செய்வதற்கான மலிவான கட்டணங்கள் இனி நீடிக்காது. சர்வதேச மற்றும் உள்நாட்டு வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்படுவதால், விமான நிறுவனங்கள் விமான கட்டணத்தில் சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன. கோவிட் சோதனைகளுக்கான கட்டணம் போன்ற சில கட்டணங்கள் செலவை ஈடுகட்டுவதாக அமையும். இதன் பொருள் 1970களில் இருந்து 2020 ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை மலிவான விமானக் கட்டணங்களை வழங்கிய லாப வரம்புகளின் வணிக மாதிரியை கைவிடுவதாகும்.