ஹாங்காங் (HK) கில் வசிப்பவரான டேவிட் ட்சோய், குறைந்த தாமதமான பங்குச் சந்தை வர்த்தக தொழில்நுட்பம், சந்தைத் தரவுப் பரவல் அமைப்பு, இடர் மேலாண்மை அமைப்புகள் மற்றும் மொபைல் சாதனப் பயன்பாடுகளில் தன்னை நிபுணராகக் காட்டிக் கொண்டார் என்று NSE மோசடி தொடர்பான விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உலகளாவிய மத்திய வங்கிகளின் வட்டி விகித உயர்வுகள் பற்றிய அச்சம் மற்றும் சீனாவில் கோவிட்-19 பயம் உள்ளிட்டவை முதலீட்டாளர்களை கவலை கொள்ளச் செய்ததன் காரணமாகவே புள்ளிகள் குறைந்துள்னன.
ஆனந்த் சுப்ரமணியன் தன்னை இமயமலை சாமியார் என தன்னை கூறிக் கொண்டு, இ-மெயில் மூலமாக சித்ரா ராமகிருஷ்ணாவை தொடர்பு கொண்டு வந்துள்ளதாகவும, அந்த மின்னஞ்சல் மூலம் மிக முக்கியமான, நுட்பமான தகவல்களை சித்ரா ராமகிருஷ்ணாவும், ஆனந்த் சுப்ரமணியனும் பகிர்ந்து வந்துள்ளனர் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இமயமலை சாமியார் என்று கூறி கொண்டு, ஆனந்த் சுப்ரமணியன் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளதாக சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் சுப்ரமணியன் தன்னை இமயமலை சாமியார் என தன்னை கூறிக் கொண்டு, இ-மெயில் மூலமாக சித்ரா ராமகிருஷ்ணாவை தொடர்பு கொண்டு வந்துள்ளார்.