BSNL ஊழியர்கள் ‘அதிகார’ (சர்க்காரி) மனப்பான்மை போக்கை கைவிடுமாறு தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கேட்டுக் கொண்டார்,
மேலும் அவர் கூறுகையில் ’சிறப்பாகச் செயல்படாத எவரும் கட்டாயமாக ஓய்வு பெறச் செய்யப்படுவார்கள்’ என்று எச்சரித்தார்....
நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் உள்நாட்டு 4ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தொலைத்தொடர்பு நிறுவனமான மகாநகர் டெலிஃபோன் லிமிடெட் நிறுவனம் ரூ. 26 ஆயிரத்து 500 கோடி கடனில் சிக்கி தவிப்பதாக வும், இதனால், தொலைத்தொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல்(Mahanagar Telephone Nigam Limited) மற்றும் பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) இரண்டையும் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
கடனில் சிக்கியுள்ள வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்தில் தனது துணை நிறுவனமான பிரைம் மெட்டல்ஸ் மூலம் பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனமான வோடபோன் தனது பங்குகளை 47.61 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக திங்களன்று செபியிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.