மத்திய நேரடி வரிகள் வாரியம் 13.6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது, இது திருத்தப்பட்ட மதிப்பீடுகளான 12.5 லட்சம் கோடியை விட 9% அதிகமாகும் என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவு தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில், வருமான வரி தாக்கல் செய்த பிறகு அதில் ஏதும் தவறுகள் இருந்தால் அதனை திருத்திக் கொள்வதற்கு 2 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.