கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 120 டாலரை தாண்டியபோதும், ஒரு டாலருக்கு ரூபாய் 77-ஆக பலவீனமடைந்தபோதும், மத்திய அமைச்சர்கள் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் முகாமிட்டிருந்தனர் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
எல்ஐசி ஏற்கனவே அதன் IPO-ஐ வெளியிடுவதற்கு செபியின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. ஆனால், பாதகமான சந்தை நிலைமைகள் மற்றும் பங்கு விற்பனைக்கான மந்த நிலைமை ஆகியவற்றைக் காரணம் காட்டி வணிக வங்கியாளர்கள் அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக நாள்தோறும் பங்குச் சந்தையில் ஏற்ற..இறக்கங்கள் காணப்படுகிறது. இதனால், எல்ஐசி ஐபிஓக்கள் விற்பனை மார்ச் 31-ம் தேதி வரை நடைபெற வாய்ப்பு இல்லை என்றும், ஆனால், மே 12-ம் தேதி வரை அரசுக்கு அவகாசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி அறிக்கையில்தான், எல்ஐசியின் ஒரு பங்கின் விலை எவ்வளவு, சில்லறை வர்த்தகர்கள், எல்ஐசி பாலிசிதாரர்கள், எல்ஐசி ஊழியர்களுக்கு எத்தனை சதவீதம் கிடைக்கும், எவ்வளவு தள்ளுபடி, எத்தனை பங்குகளை விற்க அரசு திட்டமிட்டுள்ளது என்பது உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் அதிகாரப்பூர்வமலாக தெரிவிக்கப்பட்டு இருக்கும்.
விரைவில் எல்ஐசியின் ஐபிஓக்கள் விற்பனைக்கு வரவுள்ளது. இதற்காக விண்ணப்பித்த 22 நாட்களிலேயே LIC-க்கு பங்கு பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையமான செபி அனுமதி அளித்துள்ளது.