கிரிப்டோ கரன்சி பற்றிய சர்ச்சைக்குரிய விளம்பரங்கள் அதிகரித்து வருவதால், ASCI , தொழில்துறை பங்குதாரர்கள், அரசு மற்றும் நிதிக் கட்டுப்பாட்டாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் புதிய வழிகாட்டுதல்களை இந்திய விளம்பரத் தரக்கவுன்சில்(ASCI) வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.
மரபுசாரா எரிசக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திலிருந்து தயாரிக்கப்படும் அமோனியாவும், ஹைட்ரஜனும் பசுமை அமோனியா, பசுமை ஹைட்ரஜன் என்று கூறப்படுகிறது.
அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ரூ.76,000 கோடி முதலீட்டை இலக்காகக் கொண்டு, நாட்டில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே போர்டு உற்பத்திக்கான பிஎல்ஐ (PLI) திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆலை அமைக்கும் இடத்தை இறுதி செய்ய சில மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
5G ஏலத்துக்கான பரிந்துரைகளை மார்ச் மாதத்துக்குள் சமர்ப்பிப்பதாக டிராய் தெரிவித்துள்ளதாகவும், தொலைத்தொடர்புத் துறை (DoT) ஏலத்தை விரைவில் நடத்துவதற்கான பிற செயல்முறைகளை ஒரே நேரத்தில் உறுதிப்படுத்தி வருவதாகவும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.