பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில், வருமான வரி தாக்கல் செய்த பிறகு அதில் ஏதும் தவறுகள் இருந்தால் அதனை திருத்திக் கொள்வதற்கு 2 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட சிறந்த தயாரிப்பு விலைகள், எரிவாயு சந்தைப்படுத்தல் மற்றும் டிரான்ஸ்மிஷன் பிரிவில் சிறந்த செயல்திறன் ஆகியவற்றின் காரணமாக, வரிக்குப் பிந்தைய லாபம், 7,681 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீவன் அக்ஷய் VII (திட்டம் 857) மற்றும் ஜீவன் சாந்தி (திட்டம் 858) ஆகியவற்றின் வருடாந்திரத் திட்டங்களுக்கான விகிதங்களை எல்ஐசி திருத்தியுள்ளதாகவும், திருத்தப்பட்ட பதிப்பு, திருத்தப்பட்ட வருடாந்திர விகிதங்களுடன் பிப்ரவரி 1 முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
"4G ஸ்பெக்ட்ரம், தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் BSNL-ன் மறுசீரமைப்பு ஆகியவற்றிற்கான மூலதன உட்செலுத்தலுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.