Air India நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்வதற்காக, மத்திய அரசு, அதனை தனியாருக்கு ஏலம் விட்டது. அதன்படி, Tata நிறுவனம் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது.
69 ஆண்டுகளுக்கு பிறகு, ஏர்இந்தியாவை டாடா குழுமம் மீண்டும் வாங்கியுள்ளது. ஏர்இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துகள் அனைத்தையும், மத்திய அரசு, முறைப்படி வியாழக்கிழமையன்று டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது.