NSE-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் உரிமையானது டிசம்பர் காலாண்டில் ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்தது. அதே சமயம் சில்லறை விற்பனை 14 ஆண்டுகளில் அதிகபட்சமாக அதிகரித்தது.
அதிகரித்து வரும் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களுடைய விலைகள் நிதிப்பற்றாக்குறையில் மீண்டும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் துணைநிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
நீடித்த சொத்து சரிவு மற்றும் மார்ச் மாதத்தில் தொடர்ச்சியான லாக்டவுன்கள் காரணமாக வளர்ச்சியில் ஒட்டுமொத்த முடக்கம் வந்தது. இது வணிக செயல்பாடுகளை சீர்குலைத்ததோடு அல்லாமல் நுகர்வும் குறைக்கப்பட்டது.
2019-20ல் 28 மில்லியன் வேலையில்லாதவர்களில், 15-29 வயதுக்குட்பட்ட இளம் தொழிலாளர்கள் 24 மில்லியன் பேர். 2023 மற்றும் 2030 க்கு இடையில் 90 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட வேண்டும்.