நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் திறன் வளர்ச்சிக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு, தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும், பல்லுயிரின பாதுகாப்புக்காக வள்ளலார் பல்லுயிர் காப்பகத்திற்கு ரூ .20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ திட்டத்திற்கு ரூ. 817 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ₨17,901 கோடி நிதி ஒதுக்கீடு எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் பணவீக்கத்தின் தாக்கத்தை நுகர்வோர் உணரக் கூடும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் வலுவிழப்பதால், சில்லறை நுகர்வோருக்கான விலைகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள்...