குடும்பங்களின் சராசரி பணவீக்கம் 9.7 சதவீதமாக நீடித்தது. அதே சமயம் மூன்று மாதங்கள் மற்றும் ஒரு வருடத்திற்கு முந்தைய எதிர்பார்ப்புகள் தலா 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து முறையே 10.7 சதவீதம் மற்றும் 10.8 சதவீதமாக இருந்தது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், கொரோனாவல் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பணவீக்கமும் உயர்ந்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் ரிசர்வ் வங்கி அதன் தளர்வான கொள்கையை பராமரிக்க வாய்ப்புள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சென்னையில் இன்று(29.03.2022) ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் அதிகரித்து ரூ.105.94 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 67 காசுகள் உயர்ந்து 96 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.