மாநில எரிவாயு பயன்பாட்டு நிறுவனமான கெயில் இந்தியா நிறுவனம், அரசாங்கத்தில் 51.80% பங்குகளை வைத்துள்ளது. இந்த நிலையில், கெயில் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிறுவனத்தின் வருவாய் சிறப்பான வகையில் அதிகரித்து, லாபத்துடன் உயர்ந்துள்ளதால் வலுவான நிதி நிலையுடன் உள்ளது.
கிரிசில்(Crisil) கடன்தர மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பணவீக்கம் அதிகரிக்காது என்றும், 2022-23-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி(GDP) 7.8 சதவீதமாக வளரும் எனவும் தெரிவித்துள்ளது.
வர்த்தகத்தின் அடிப்படையில் ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் இந்தியாவின் நேரடி வெளிப்பாடு பெரிதாக இல்லை என்றாலும், எதிர்பார்த்தபடி பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
விலை திருத்தத்துக்குப் பிறகு, ஒரு டன் HRC-க்கு சுமார் ரூ.66,000 வரையும், அதே நேரத்தில் TMT பார்கள் ஒரு டன்னுக்கு ரூ.65,000-க்கு வரைக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.