இந்தியாவின் மொத்த விலைக் குறியீடு, ஜனவரி மாதத்தில் முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட 13% உயர்ந்துள்ளது. சேவைகளை உள்ளடக்கிய நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த 10 மாதங்களாக இரட்டை இலக்க அதிகரிப்புகளைப் பதிவு செய்துள்ளது.
ஒமைக்ரான் கோவிட் பெருந்தொற்று காரணமாக, இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மை, நிதிநிலை குறியீடுகள் மற்றும் நிதித்துறை, மருத்துவத்துறை மற்றும் பணவீக்கம் உள்ளிட்டவை வரும் நிதியாண்டில் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.