குறைந்தபட்ச நிகரச் சொந்தமான ரூ.100 கோடி நிதியைக் கொண்ட பெரிய NBFCகள், ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியுடன் வணிகத்தில் நுழையலாம் என்று வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன.
கிரிப்டோ கரன்சி பற்றிய சர்ச்சைக்குரிய விளம்பரங்கள் அதிகரித்து வருவதால், ASCI , தொழில்துறை பங்குதாரர்கள், அரசு மற்றும் நிதிக் கட்டுப்பாட்டாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் புதிய வழிகாட்டுதல்களை இந்திய விளம்பரத் தரக்கவுன்சில்(ASCI) வெளியிட்டுள்ளது.
கிரிப்டோ கரன்சிகள் எனப்படும் மெய்நிகர் பணம் என்பது ஒரு பொருளோ, சொத்தோ கிடையாது. அவை பணம் போன்றவையும் அல்ல. அதற்கென உள்ளார்ந்த மதிப்பு எதுவும் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபி சங்கர் தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் கிரிப்டோ கரன்சியால் வந்த வருமானத்திற்கு 30 சதவிகிதம் வரியும், செஸ் மற்றும் சர்சார்ஜ்ஜூம் செலுத்த வேண்டும் என்றும், அதற்காக ஒரு ’காலம்’ உருவாக்கப்படும் என்றும், அரசாங்கம் கிரிப்டோவை முறைப்படுத்துவதற்காக செயல்முறையில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தருண் பஜாஜ் கூறியுள்ளார்.