வழக்கமாக மாதத்தின் முதல் நாளன்று LPG எனப்படும் வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றி அமைக்கப்படும். ஆனால், 2021 அக்டோபர் மாதத்துக்கு பிறகு சமையல் எரிவாயு உருளையின் விலை மார்ச் 10-ம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிகப்படும் வரை மாற்றம் செய்யப்படவில்லை.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் சர்வதேச சந்தையில் விற்பனையாகும் கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி, இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
விமானங்களை இயக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஜெட் எரிபொருளின் விலையும் 15 நாட்களுக்கு ஒருமுறை என மாதத்தில் 1 மற்றும் 16-ம் தேதிகளில் ஜெட் எரிபொருளின் விலையும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
சீனாவை சேர்ந்த மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் Huawei. இது மொபைல் ஃபோன், டிவி உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. Huawei நிறுவனம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது.