ஏப்ரல் 1, 2021 முதல் 2022 ஜனவரி 17 வரை 1.74 கோடி வரி செலுத்துவோருக்கு ₹1.59 டிரில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை வியாழக்கிழமை ஒரு டுவிட்டில் தெரிவித்துள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் பங்குகள் இன்று சந்தையில் 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன.பி.எஸ்.இ.யில் பங்கு 3.24 சதவீதம் உயர்ந்து ₹3,979.90 ஆகவும், என்.எஸ்.இ.யில் இது 3.23 சதவீதம் உயர்ந்து ₹3,978 ஆகவும் இருந்தது. ஜனவரி 12, 2022 அன்று நடைபெறவுள்ள அதன் கூட்டத்தில், நிறுவனத்தின் பங்குகளை திரும்ப வாங்குவதற்கான "பை பேக்" திட்டத்தை இயக்குநர்கள் குழு பரிசீலிக்கும்" என்று நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. பை பேக் பற்றிய வேறு எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) இப்போது வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் சிக்னல், போன்ற உடனடி செய்தி தளங்கள் மூலம் பத்திரச் சட்டக் குற்றவாளிகளுக்குக்கு, சம்மன்கள் மற்றும் உத்தரவுகளை அனுப்பும் செயல்முறைகளை விரைவாகவும் திறமையாகவும் செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது மின்னணு அஞ்சல், பதிவு அஞ்சல், கூரியர் மற்றும் தொலைநகல் உள்ளிட்ட வழக்கமான தகவல் தொடர்பு முறைக்கு கூடுதலான சேவையாக இருக்கும்.
2020-21 நிதியாண்டுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருடாந்திர வருமானத்தை வணிக நிறுவனங்கள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நீட்டித்துள்ளது. நிதியாண்டு 20-21 க்கான ஜிஎஸ்டிஆர் 9ம் 9சியையும் தாக்கல் செய்வதற்கான...