கிரிசில்(Crisil) கடன்தர மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பணவீக்கம் அதிகரிக்காது என்றும், 2022-23-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி(GDP) 7.8 சதவீதமாக வளரும் எனவும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக எரிபொருள் விலை அதிகரிப்பு, அவற்றின் விநியோக பாதிப்புகள் இருந்தாலும், நடப்பு 2022-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.5 சதவீதமாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய புள்ளியியல் துறையின் ஏஜென்சியான India Ratings வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு நிதியாண்டான 2022-இன் முதல் காலாண்டு மற்றும் இரண்டாவது காலாண்டில் GDP வளர்ச்சி முன்பு மதிப்பிடப்பட்டதை விட 90-110 அடிப்படை புள்ளிகள் குறையக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
உயர் அதிர்வெண் குறிகாட்டிகள் 3-ம் காலாண்டில் தேவை சில பலவீனமடைவதையும், ஜனவரி 2022 வரை தொடர்வதையும் பரிந்துரைக்கிறது, இது தொடர்பு-தீவிர சேவைகளில் இழுபறியை பிரதிபலிக்கிறது.