இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக சரிவைச் சந்தித்து வருகிறது. 2017-18ல் 35.7 மில்லியன் டன்னாக இருந்து, அடுத்த ஆண்டில் 34.2 மில்லியன் டன்னாகவும், 2019-20ல் 32.2 ஆகவும், 2020-21ல் 30.5 மில்லியன் டன்னாகவும் குறைந்துள்ளது.
இது பிப்ரவரி 2002க்குப் பிறகு மிக அதிகமாக இருந்தது என்றும் ஒரு வாரத்திற்கு முன்புகூட 16.70 சதவீதமாக இருந்தது என்று பொருளாதார அமைச்சகம் புதன்கிழமை கூறியது.
சென்னையில் இன்று(29.03.2022) ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் அதிகரித்து ரூ.105.94 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 67 காசுகள் உயர்ந்து 96 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முதலீடுகள் தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் கிரிசில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கருத்து வெளியிட்டிருந்தது.
பல்வேறு காரணங்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், கடந்த 4 மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால், பொதுத்துறை பெட்ரோலிய நிலையங்களுக்கு ரூ.19 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மூடிஸ் முதலீட்டு சேவை நிறுவனம் தெரிவித்திருந்தது.