வழக்கமாக மாதத்தின் முதல் நாளன்று LPG எனப்படும் வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றி அமைக்கப்படும். ஆனால், 2021 அக்டோபர் மாதத்துக்கு பிறகு சமையல் எரிவாயு உருளையின் விலை மார்ச் 10-ம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிகப்படும் வரை மாற்றம் செய்யப்படவில்லை.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் சர்வதேச சந்தையில் விற்பனையாகும் கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி, இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரித்த போதிலும், இந்திய அரசு, நவம்பர் 4 முதல் சில்லறை விலைகளை உயர்த்தவில்லை, ஆனால் அவர்கள் தொழில்துறை அல்லது மொத்த வாடிக்கையாளர்களுக்கான நேரடி விற்பனையின் விலைகளை தொடர்ந்து உயர்த்தியுள்ளனர்.
மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் காரணமாக ஒரு நாளைக்கு 3 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் விநியோகத்தை ரஷ்யா நிறுத்தக்கூடும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) கூறியுள்ளது.