பாகிஸ்தான் நாட்டின் சியால்கோட் நகரத்தை சேர்ந்த Mahashian Di Hatti Private Limited நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. MDH என்று பரவலாக அறியப்பட்ட இந்நிறுவனம் பல்வேறு மசாலா பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.
ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் டிசம்பர் காலாண்டில் ₹2,243 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு காலாணடில் பதிவான ரூ.1.921 கோடியிலிருந்து 17% அதிகமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பாளரான HUL, கொரோனா தொற்று, பொதுமுடக்கம் போன்ற காரணிகளில் இருந்து வெளி வந்ததால் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் (HUL) நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு முடிவுகளை அறிவிக்கும்போது, தொழில்துறையின் போக்குகள் கிராமப்புறங்களின் தேவை குறைவாக இருப்பதாக தெரிவித்திருந்தது. இதற்கான காரணங்கள் குறித்து கண்காணிக்கப்பட வேண்டும் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். மூன்றாவது காலாண்டை பொறுத்தவரை, அதன் வளர்ச்சி விகிதங்கள் தொடர்ந்து குறைவாக உள்ளன. ஆனால், பொருட்களின் தயாரிப்பு விலை அதிகரிப்பால் வருவாய் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.