இந்தியாவின் பிரபல செல்போன் நெட்வொர்க்களில் ஒன்றான வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனம் கடும் கடன் சுமையில் சிக்கித்தவிக்கிறது. 4ஜி அலைக்கற்றையை வாங்கியதில் அரசுக்கு செலுத்தவேண்டிய பணம் 16 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது....
கடனில் சிக்கியுள்ள வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்தில் தனது துணை நிறுவனமான பிரைம் மெட்டல்ஸ் மூலம் பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனமான வோடபோன் தனது பங்குகளை 47.61 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக திங்களன்று செபியிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செபியின் ICDR விதிமுறைகளில் (மூலதனம் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) பரிந்துரைக்கப்பட்ட வெளியீட்டு விலை இருப்பதாக IiAS கூறியது. வெளியீட்டு விலையானது 90 நாள் வால்யூம் வெயிட்டேட் சராசரி மற்றும் 10 நாள் வால்யூம் வெயிட் சராசரியை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று விதி கூறுகிறது.