2021 டிசம்பர் மாதத்துடன் முடிந்த 3-வது காலாண்டில், 11.450.80 கோடி உயர்ந்து, தற்போது உள்ள Tech Mahindra-வின் நிகர லாபம் 1.378.20 கோடியாக பதிவாகியுள்ளது. அந்த காலாண்டில் வரிக்கு முந்தைய லாபம் 9.9 சதவீதம் அதிகரித்து ரூ.1.886.40 கோடியாக இருந்தது. அந்நிறுவனத்தின் EBITDA 2021 டிசம்பர் 3 ஆம் காலாண்டில் 8.7% அதிகரித்து 2,060 கோடி ரூபாயாக உயர்ந்தது. EBITDA 2021 ஆம் ஆண்டின் Q2 இல் 18.3% ஆக இருந்தது.
ஆடம்பர மக்கள் பயன்படுத்தும், வெட்டி எடுத்து பட்டை தீட்டப்பட்ட வைர நகைகள் மீதான சுங்க வரி 5% குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் இமிடேஷன் நகைகளுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு, அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியா, கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சரி செய்து வேகமாக வளர்ந்து வருகிறது.