AISTA இன் முதல் மதிப்பீட்டின்படி, நாட்டின் சர்க்கரை உற்பத்தி 2021-22 சந்தைப்படுத்தல் ஆண்டில் 31.9 மில்லியன் டன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது முந்தைய ஆண்டில் 31 மில்லியன் டன்களாக இருந்தது.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில், வணிகவியலில் பட்டம் பெற்ற அனந்த் நாகேஸ்வரராவ், அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்-மில், மேலாண்மை படிப்பில் முதுநிலை டிப்ளமோ பட்டமும், மாற்று விகிதங்களின் அனுபவ நடத்தை குறித்த தனது பணிக்காக மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் நிதித்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.
சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்டு ஸ்விஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. விமான பராமரிப்பு, பழுது நீக்குதல் மற்றும் உதிரிபாகங்கள் அளித்தது தொடர்பாக, Spicejet விமான நிறுவனம் ஸ்விஸ் நிறுவனத்துக்கு ரூ.180 கோடி ரூபாய் கடன் தர வேண்டியுள்ளது.
கூகுள் நிறுவனம், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம், தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக சேவைகளை அளித்து வர்த்தகத்தை பெருக்க முடியும் என்று திட்டமிட்டு, செயல்பட்டு வருகிறது. இதற்காக, Smart Phone-களுக்கான சிறப்பு Andriod தொழில் நுட்பத்தையும் கூகுள் உருவாக்கியுள்ளது.
வியாழக்கிழமை காலை 11 மணி நிலவரப்படி, பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு செவ்வாய்க்கிழமை ரூ.262.78 லட்சம் கோடியிலிருந்து ரூ.4.01 லட்சம் கோடி குறைந்து ரூ.258.77 லட்சம் கோடியாக இருந்தது.