ஆயில்-டு-டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) டிசம்பர் 2021 முடிவடைந்த காலாண்டில் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டளவில் 37.90 சதவீதம் உயர்ந்து யாக அறிவித்துள்ளது, முகேஷ் அம்பானி தலைமையிலான நிறுவனம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.14,894 கோடி லாபம் ஈட்டியுள்ளது. ரிலையன்ஸின் சில்லறை விற்பனைப் பிரிவு ஆண்டு லாபத்தில் 23 சதவீதம் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் டெலிகாம் பிரிவு மூன்றாம் காலாண்டு லாபத்தில் 8.9 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஏப்ரல் 1, 2021 முதல் 2022 ஜனவரி 17 வரை 1.74 கோடி வரி செலுத்துவோருக்கு ₹1.59 டிரில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை வியாழக்கிழமை ஒரு டுவிட்டில் தெரிவித்துள்ளது.
ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் டிசம்பர் காலாண்டில் ₹2,243 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு காலாணடில் பதிவான ரூ.1.921 கோடியிலிருந்து 17% அதிகமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பாளரான HUL, கொரோனா தொற்று, பொதுமுடக்கம் போன்ற காரணிகளில் இருந்து வெளி வந்ததால் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு ஆண்டில், வர்த்தக ஏற்றுமதியில் 400 பில்லியன் டாலர்களை எட்டும் பாதையில் இந்தியா செல்வதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஃபியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார். மேலும், சேவை ஏற்றுமதி சுமார் 240 பில்லியன் முதல் 250 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இருக்கும். இது குறைவான இருந்தாலும், வர்த்தக ஏற்றுமதியை எட்டிபிடிக்கும் வகையில் வளர்ச்சி அடைய முடியும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த ஏலச் சுற்றில், நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), நகர எரிவாயு விநியோக நெட்வொர்க்குகளை அமைப்பதில் ரூ. 7,000 கோடி முதலீடு செய்யப்போவதாகக் கூறியது. ஜம்முவில் இருந்து மதுரை முதல் ஹல்டியா வரையிலான நகரங்களை வளைத்து எடுத்ததில், IOC 33 சதவீத தேவை திறனைப் பெற்றுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.