கிரிசில்(Crisil) கடன்தர மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பணவீக்கம் அதிகரிக்காது என்றும், 2022-23-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி(GDP) 7.8 சதவீதமாக வளரும் எனவும் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் என்று அழைக்கப்படும் IMF-ன் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு மற்றும் அதன் உலகளாவிய தாக்கம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசினார்.
2022 பிப்ரவரி 18-ம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில், இந்திய மதிப்பின்படி, சுமார், ரூ.20,700 கோடியிலிருந்து அதிகரித்து, சுமார் 47.47 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக எரிபொருள் விலை அதிகரிப்பு, அவற்றின் விநியோக பாதிப்புகள் இருந்தாலும், நடப்பு 2022-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.5 சதவீதமாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து SEPC தலைவர் சுனில் ஹெச் தலாதி பேசும்போது, வரும் மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ள நிதியாண்டில், நாட்டின் சேவைகள் ஏற்றுமதி ரூ.18.74 லட்சம் கோடியை எட்டும் என்று தெரிவித்துள்ளார்.