யுனிலீவர் பிஎல்சி மற்றும் சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷனின் இந்திய யூனிட்கள் முதல் உள்நாட்டு JSW ஸ்டீல் லிமிடெட் வரையிலான நிறுவனங்கள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து எரிசக்தி செலவுகள் அதிகரித்ததால், உலகளாவிய விநியோக அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக விலைகளை உயர்த்துகின்றன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், கொரோனாவல் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பணவீக்கமும் உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று(29.03.2022) ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் அதிகரித்து ரூ.105.94 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 67 காசுகள் உயர்ந்து 96 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முதலீடுகள் தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் கிரிசில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கருத்து வெளியிட்டிருந்தது.